Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அம்மா, பாட்டிக்கு மரணத்தை விளைவித்தவர் காலவரையற்றத் தடுப்புக்காவலில்

வாசிப்புநேரம் -

காமன்வெல்த் வட்டாரத்தில் தாய், பாட்டி ஆகியோருக்கு மரணத்தை விளைவித்த நபர் காலவரையின்றித் தடுப்புக்காவலில் வைக்கப்படவுள்ளார். 

கேப்ரியல் லியன் கோ என்ற அந்த 25 வயது நபர் 2019ஆம் ஆண்டில் சரியான மனநிலையில் இல்லாதபோது அவரது தாயார், பாட்டி ஆகியோர் மாண்டதற்குக் காரணமானார். 

குற்றம் இடம்பெற்றபோது இருந்த அவரது மனநிலை கருத்திற்கொள்ளப்பட்டதால் அவருக்குக் கொலைக் குற்றங்களின் அடிப்படையில் தண்டனை விதிக்கப்படவில்லை. 

அவரைத் தடுத்துவைப்பதற்கு நீதிபதி உத்தரவிட்டார். 

அதையடுத்து வழக்கு அமைச்சரிடம் சென்றுசேரும். அதன் பின்னர் அவரை மனநல நிலையம் அல்லது சிறைச்சாலை எனப் பொருத்தமான ஏதேனும் ஓரிடத்தில் தடுத்துவைக்கப்படுவது குறித்து அமைச்சர் முடிவுசெய்வார். 
2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கோ காமன்வெல்த் அவென்யூ புளோக் 7Aஇல் அவரது 56 வயதுத் தாயின் நெஞ்சைக் கத்தியால் குத்திக் கொன்றார். 

அதையடுத்து அவரது 90 வயதுப் பாட்டியைத் தலையில் பலமுறை அடித்துக் கொன்றார் கோ.

LSD எனும் போதைப்போருளை உட்கொண்ட பிறகே அவர் அவர்களை அவ்வாறு கொடூரமாகக் கொன்றதாகத் தெரிவிக்கப்பட்டது. அந்தப் போதைப்பொருள் அவரைச் சிந்திக்கவிடாமல் தடுத்ததாக நம்பப்படுகிறது. 


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்