Skip to main content
Instagramஇல் போலி வெடிகுண்டுச் செய்தி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

Instagramஇல் போலி வெடிகுண்டுச் செய்தி - சாங்கி விமான நிலையத்தில் 3 விமானங்கள் தாமதம்

வாசிப்புநேரம் -
Instagramஇல் போலி வெடிகுண்டுச் செய்தி - சாங்கி விமான நிலையத்தில் 3 விமானங்கள் தாமதம்

(கோப்புப் படம்: REUTERS/Edgar Su)

19 வயதுச் சிங்கப்பூரர் விமானத்தை வெடிகுண்டு வைத்துத் தகர்த்தப்போவதாகத் தனது தனிப்பட்ட Instagram பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

பின்னர் அவர் சிங்கப்பூரிலிருந்து தைப்பேக்குச் சென்றுவிட்டார்.

காவல்துறைக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் பற்றித் தகவல் கிடைத்தது.

பாதுகாப்புச் சோதனைகள் வலுப்படுத்தப்பட்டன. அதனால் சாங்கி விமான நிலையத்தில் 3 விமானப் பயணங்கள் தாமதமாகின.

இப்போது 20 வயதாகும் ரைக்ஸ் டான் ஸி காய் (Rykes Tan Zhi Kai) தீங்கு விளைவிக்கும் செயலைப் பற்றிப் போலித் தகவல் அளித்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.

சென்ற ஆண்டு (2025) ஜூன் மாதம் அந்தச் சம்பவம் நடந்தது.

விமானத்தை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப் போகிறேன் என்று விளையாட்டாகக் கூறியதாக டான் சொன்னார்.

அவர் தைப்பேயிலிருந்து திரும்பியவுடன் கைது செய்யப்பட்டார்.

தண்டனை பின்னொரு தேதியில் அறிவிக்கப்படும்.

7 ஆண்டு வரை சிறை, 50,000 வெள்ளிவரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்