Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

20 வெளிநாட்டவருக்கு சட்டவிரோதமாக வேலை அனுமதிக்கு ஏற்பாடு செய்ததாக நம்பப்படும் ஆடவர்

வாசிப்புநேரம் -
20 வெளிநாட்டவருக்கு சட்டவிரோதமாக வேலை அனுமதிக்கு ஏற்பாடு செய்ததாக நம்பப்படும் ஆடவர்

கோப்புப் படம்: Channel NewsAsia

சிங்கப்பூருக்கு 20 வெளிநாட்டவரை வரவழைக்கச் சட்டவிரோதமான வழியில் வேலை அனுமதிக்கு ஏற்பாடு செய்ததாக ஆடவர் ஒருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

30 வயது சின் சியாவ்சி (Qin Xiaoxi) 2022ஆம் ஆண்டு மே மாதத்துக்கும் செப்டம்பர் மாதத்துக்கும் இடையில் வேலை அனுமதி அட்டைகளுக்கு ஏற்பாடு செய்ததாக நம்பப்படுகிறது.

அவர் வேலை அனுமதி அட்டைக்கு ஏற்பாடு செய்ததற்குப் பதிலாகப் பணம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

Xpress Manufacture, Express Manufacture ஆகிய நிறுவனங்களின் இயக்குநர் என்ற பெயரில் சின் வேலை அனுமதிக்கு ஏற்பாடு செய்ததாக மனிதவள அமைச்சு நம்புகிறது.

அந்த நிறுவனங்கள் உண்மையில் செயல்படவில்லை என்று அமைச்சு சொன்னது.

Xpress Cleaning & Service எனும் நிறுவனத்தின் உரிமையாளரான சின், வெளிநாட்டு ஊழியர்களை வேலையில் சேர்க்கும் வரம்பை எட்டிவிட்டார். 

அவர் ஏற்கெனவே தகுந்த வேலை அனுமதி பெறாமல் Xpress Cleaning & Service நிறுவனத்தில் இருவரை வேலையில் வைத்திருந்தார் என்றும் நம்பப்படுகிறது.

சம்பந்தப்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் மீதான விசாரணை தொடர்கிறது.

தகுந்த வேலை அனுமதி இல்லாத வெளிநாட்டவரை வேலையில் சேர்க்கும் முதலாளிகளுக்கு 5,000 வெள்ளி முதல் 30,000 வெள்ளி வரை அபராதமோ அதிகபட்சம் 12 மாதச் சிறைத்தண்டனையோ இரண்டுமோ விதிக்கப்பட்டலாம்.

அவர்கள் பின்னர் வெளிநாட்டவரை வேலையில் சேர்க்கவும் தடை செய்யப்படலாம்.

ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்