2 பெண்களை மானபங்கம் செய்த சந்தேகத்தில் ஆடவர் கைது

(படம்: Jeremy Long)
தோ பாயோ பெருவிரைவு ரயில் நிலையத்தில் இரண்டு பெண்களை மானபங்கம் செய்த சந்தேகத்தில் ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெள்ளி (14 ஜனவரி) இரவு 11:10 மணிக்குச் சம்பவம் குறித்துக் காவல்துறைக்குப் புகார் அளிக்கப்பட்டது.
ரயில் நிலையத்தில் சில நிமிட இடைவெளியில் இரண்டு பெண்களை அந்த ஆடவர் மானபங்கம் செய்ததாகப் புகாரில் கூறப்பட்டது.
காவல்துறையின் விசாரணை, கண்காணிப்புக் கேமராக்கள் ஆகியவற்றின் மூலம் ஆடவரின் அடையாளத்தைக் காவல்துறையினர் கண்டறிந்தனர்.
சம்பவம் நடந்த மூன்று மணிநேரத்தில் ஆடவர் கைது செய்யப்பட்டார்.
விசாரணை தொடர்வதாகக் காவல்துறை தெரிவித்தது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அந்த ஆடவருக்கு 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, பிரம்படி, அபராதம் அல்லது அவற்றில் எதுவும் விதிக்கப்படலாம்.