இணைய வர்த்தக மோசடிகளில் ஈடுபட்டதாகச் சந்தேகம் - 35 வயது ஆடவர் கைது
வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் இணைய வர்த்தக மோசடிகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 35 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Apple பொருள்கள், கார் வாடகைகள், கார் சாதனங்கள் ஆகியவற்றில் மோசடி நடந்ததாக நம்பப்படுகிறது.
சென்ற ஆண்டு (2024) மே முதல் டிசம்பர் வரை அது குறித்துப் புகார்களைப் பெற்றதாகக் காவல்துறை கூறியது.
பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 23,400 வெள்ளியை இழந்தனர்.
அவர்கள் PayNow அல்லது வங்கிப் பரிவர்த்தனை மூலம் பணம் செலுத்திய பிறகு விற்பனையாளரைத் தொடர்புகொள்ள முடியாமல் போகும்.
விசாரணை மூலம் சந்தேக நபரின் அடையாளம் நிர்ணயிக்கப்பட்டது. அவர் நேற்று (10 ஜனவரி) கைது செய்யப்பட்டார்.
அவர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 10 ஆண்டு வரையிலான சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

ஆதாரம் : Others