Skip to main content
வீட்டுக்குள் புகுந்த ஆடவர் 5 மணிநேரத்தில் கைது
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

வீட்டுக்குள் புகுந்த ஆடவர் 5 மணிநேரத்தில் கைது

வாசிப்புநேரம் -
வீட்டுக்குள் புகுந்த ஆடவர் 5 மணிநேரத்தில் கைது

படம்: Envato

சிங்கப்பூரில் ஒரு வீட்டுக்குள் புகுந்த சந்தேகத்தில் 27 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆடவர் பைன் கிலொஸ் (Pine Close) குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டுக்குள் சன்னல் வழியாகப் புகுந்தார் என்று சொல்லப்பட்டது.

வீட்டில் எந்தப் பொருளும் திருட்டுப் போகவில்லை.

நேற்று மாலை 6.30 மணியளவில் சம்பவம் குறித்து காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.

விசாரணை, கண்காணிப்புக் கேமரா பதிவுகள் ஆகியவற்றின் மூலம் அதிகாரிகள் ஆடவரை அடையாளம் கண்டனர்.

புகார் கிடைத்த ஐந்து மணிநேரத்திற்குள் ஆடவர் பிடிபட்டார்.

அவர் மீது நாளை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்.

வீட்டுக்குள் அத்துமீறிப் புகுந்த குற்றத்திற்காக அதிகபட்சம் 10 ஆண்டுச் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்