Skip to main content
பூன் லே வீட்டில் ஆடவர் மரணம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பூன் லே வீட்டில் ஆடவர் மரணம் - ஒருவர் கைது

வாசிப்புநேரம் -
பூன் லே அவென்யூ வழியே இருக்கும் வீட்டில் 56 வயது ஆடவர் மாண்டுகிடந்ததன் தொடர்பில் 58 வயது ஆடவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து காவல்துறைக்கு இன்று காலை 11.35 மணிக்குத் தகவல் கிடைத்தது.

புளோக் 187 பூன் லே அவென்யூவில் சம்பவம் நடந்ததாக நம்பப்படுகிறது.

சம்பவ இடத்திற்குக் காவல்துறை அதிகாரிகள் சென்றபோது வீட்டில் அசைவின்றி ஆடவர் ஒருவர் இருந்ததை அவர்கள் கண்டனர்.

மாண்ட ஆடவருக்கும் கைதுசெய்யப்பட்ட ஆடவருக்கும் ஒருவரை ஒருவர் தெரியும் என்று காவல்துறையின் முன்னோடி விசாரணையில் தெரியவந்துள்ளது.

காவல்துறை விசாரணை தொடர்கிறது.
படம்: CNA/Jeremy Long
படம்: CNA/Jeremy Long
படம்: CNA/Jeremy Long
ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்