Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

காவல்துறையினருடன் சண்டைபோட முயன்றவருக்கு 7 மாதச் சிறை

வாசிப்புநேரம் -

பிரெஞ்சு ரோட்டிலுள்ள LEFA de Cafe எனும் காப்பிக் கடையில் பிறரைக் காயப்படுத்தி, அரசாங்க அதிகாரிகளை, அவர்களின்  பணிகளைச் செய்வதிலிருந்து தடுத்த 42 வயது ஆடவருக்கு 7 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

சென்ற ஆண்டு ஜூலை மாதம் 16ஆம் தேதி பிற்பகல் 1.35 மணியளவில், வோங் இயூ தியென் என்ற அந்த ஆடவர் LEFA de Cafe காப்பிக்கடைக்கு வெளியே படுத்த நிலையில் காணப்பட்டார். 

அவசர மருத்துவ உதவி வாகனத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்ட சிறிது நேரத்தில்  அங்கு சென்ற மருத்துவ உதவியாளர்கள் வோங்கைப் பரிசோதிக்க முயன்றனர். 

அவரோ, திடீரெனக் கத்தத் தொடங்கி நாற்காலிகளை வீச ஆரம்பித்தார். 

அவரைக் கட்டுப்படுத்த முடியாமல் மருத்துவ உதவியாளர்கள் காவல்துறையினரின் உதவியை நாடினர். அந்த ஆடவர் போதைப்பொருள் உட்கொண்டிருக்கலாம் என்று கூறப்பட்டது. 

காவல்துறையினர் அந்த இடத்தை அடைந்ததும், வோங் மேசை ஒன்றைக் கவிழ்த்து, அங்கிருந்த 25 வயதுக் காவல்துறை அதிகாரியுடன் சண்டையிட முயன்றார். 

வோங்கிற்குப் பலமுறை எச்சரிக்கைவிடுத்தும் அவர் தொடர்ந்து மூர்க்கமாக நடந்துகொண்டார். பின்னர், பெண் காவல்துறை அதிகாரியுடன் மோத முயன்றபோது அந்த அதிகாரி அவரைத் தடுத்தார். 

வோங் இன்னோர் அதிகாரியைப் பல முறை தாக்கியதில் அவருக்குக் கையில் காயம் ஏற்பட்டது. 

பின்னர் அதிகாரிகள் அவரை Taser துப்பாக்கியால் சுட்டுச் சாந்தப்படுத்தினர். 

நீதிமன்றத்தில் வோங், தாம் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்