போலி $10,000 நோட்டு - இளையர் கைது
வாசிப்புநேரம் -
(படம்: Singapore Police Force)
வங்கிக் கணக்கில் 10,000 வெள்ளி போலி நோட்டைப் போட முயன்றதாகச் சந்தேகிக்கப்படும் 22 வயது இளையர் மீது நாளை (செப்டம்பர் 4) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவுள்ளது.
ஆகஸ்ட் 15ஆம் தேதி கிளமெண்டி அவென்யூ 3இல் (Clementi Avenue 3) உள்ள வங்கி ஊழியர் ஒருவரிடம் அந்தப் பணத்தைக் கணக்கில் போடச் சொல்லி அவர் சொன்னார்.
பணம் போலியாக இருக்குமோ என்ற சந்தேகித்த வங்கி ஊழியர் அத்தகவலை வங்கி மேலாளரிடம் தெரிவித்தார்.
காவல்துறை வரவழைக்கப்பட்டு இளையர் கைதுசெய்யப்பட்டார்.
பண நோட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
போலி பண நோட்டைப் பயன்படுத்திய குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 20 ஆண்டுச் சிறையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
சிங்கப்பூரில் 2014ஆம் ஆண்டு அக்டோபரிலிருந்து 10,000 வெள்ளி நோட்டுகள் அச்சிடப்படுவதில்லை.
ஆனால் புழக்கத்திலிருக்கும் 10,000 வெள்ளி நோட்டுகள் சட்டப்படி செல்லுப்படியாகும்.

ஆதாரம் : CNA