Skip to main content
தானியக்க வங்கி இயந்திரங்களில் சிக்கிய டிஷ்யு தாள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

தானியக்க வங்கி இயந்திரங்களில் சிக்கிய டிஷ்யு தாள் - 37 வயது ஆடவர் கைது

வாசிப்புநேரம் -
தானியக்க வங்கி இயந்திரச் (ATM) சேவைகளில் தடங்கல் ஏற்படுத்திய சந்தேகத்தில் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு வயது 37.

கடந்த மாதம் 27ஆம் தேதியிலிருந்து 29ஆம் தேதி வரை பல தானியக்க வங்கி இயந்திரங்கள் சேதமடைந்ததாய்ப் புகார் கிடைத்ததாகக் காவல்துறை கூறியது.

கண்காணிப்புக் கேமாராப் பதிவுகளை ஆய்வு செய்தபோது ஆடவர் வங்கி அட்டையின் அடியில் டிஷ்யு தாளை வைத்து இரண்டையும் இயந்திரத்தினுள் செலுத்தியது புலப்பட்டது.

அதனால் டிஷ்யு தாள் உள்ளே சிக்கி இயந்திரத்தைப் பயன்படுத்த முடியாமல்போனது.

பேட்டரி ரோட், சைனா டவுன், தஞ்சோங் காத்தோங், உட்லண்ட்ஸ், தோ பாயோ, மரினா பே, பாயா லேபார் (Battery Road, Chinatown, Tanjong Katong, Woodlands, Toa Payoh, Marina Bay, Paya Lebar) ஆகிய பகுதிகளில் இருந்த இயந்திரங்கள் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அவை சீர்செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை சொன்னது.

கண்காணிப்புக் கேமாராப் பதிவுகள் மூலம் ஆடவரின் அடையாளம் உறுதிசெய்யப்பட்டது. அவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

பொதுச்சேவைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதற்காக அவர் மீது நாளை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்.

குற்றம் நீருபிக்கப்பட்டால் அவருக்கு அதிகபட்சம் 10 ஆண்டுச் சிறை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
 
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்