போலித் துப்பாக்கிகளை விற்றதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு
வாசிப்புநேரம் -

படம்: CNA/Ili Nadhirah Mansor
சிங்கப்பூருக்குள் உரிமம் இல்லாமல் போலித் துப்பாக்கிகளைக் கொண்டுவந்ததாக ஆடவர் மீது நாளை (6 மார்ச்) குற்றஞ்சாட்டப்படவுள்ளது.
சந்தேக நபருக்கு வயது 44.
சிங்கப்பூர்க் காவல்துறை தகவல்களை வழங்கியது.
இணைய வர்த்தகத் தளத்தில் போலித்துப்பாக்கிகள் விற்பனை செய்யப்படுவதாகக் காவல்துறைக்கு 2023ஆம் ஆண்டு மே 11ஆம் தேதி தகவல் கிடைத்தது.
விசாரணை நடத்தியதில் குற்றவியல் விசாரணைப் பிரிவும் மத்திய காவல்துறை பிரிவும் சேர்ந்து சந்தேக நபரின் அடையாளத்தை உறுதிசெய்தன.
அதே ஆண்டு மே 26ஆம் தேதி ரேஸ் கோர்ஸ் லேனில் (Race Course Lane) உள்ள அவருடைய வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.
அங்கு 154 போலித் துப்பாக்கிகளும் அது தொடர்பான பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆதாரம் : Others