வீட்டுக்குத் தீ வைத்த ஆடவர்? - நாளை குற்றச்சாட்டு
வாசிப்புநேரம் -
படம்: Envato
சிங்கப்பூரில் ஒரு வீட்டுக்குத் தீவைக்க முயன்றதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர் மீது நாளை குற்றஞ்சாட்டப்படவிருக்கிறது.
ஜூ செங் (Joo Seng) ரோட்டில் இருக்கும் புளோக் 14இல் தீ மூண்டது.
தீப்பற்றிய வீடும் சுற்றியிருந்த மற்ற வீடுகளும் பெருமளவில் சேதமடைந்தன.
நேற்றிரவு 9.40 மணியளவில் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.
சம்பவத்தின்போது புகையைச் சுவாசித்த எட்டு குடியிருப்பாளர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
இரண்டு தீயணைப்பு வீரர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
விசாரணை, காவல்துறை கேமரா பதிவுகள் ஆகியவற்றின் மூலம் அதிகாரிகள் சந்தேக நபரை அடையாளங்கண்டனர்.
44 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார்.
அவர் வீட்டை நாசமாக்கத் தீ வைத்து ரகளை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்படும்.
அவருக்கு அதிகபட்சம் 10 ஆண்டுச் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

ஆதாரம் : Mediacorp Seithi