Skip to main content
பூன் லே வீட்டில் ஆடவர் மரணம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பூன் லே வீட்டில் ஆடவர் மரணம் - 58 வயது ஆடவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்படும்

வாசிப்புநேரம் -
பூன் லே அவென்யூவில் உள்ள வீட்டில் மாண்டுகிடக்கக் காணப்பட்ட 56 வயது ஆடவரைக் கொன்றதாக 58 வயது ஆடவர் மீது நாளை
(13 மார்ச்) குற்றஞ்சாட்டப்படும்.

இருவரும் சகோதரர்கள் என்று CNA செய்தித்தளம் தெரிவித்தது.

புளோக் 187இன் 11ஆம் மாடி வீட்டில் சம்பவம்
நடந்தது குறித்து நேற்றுக் காலை சுமார் 11.35 மணியளவில் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை குறிப்பிட்டது.

சம்பவ இடத்திற்குக் காவல்துறை அதிகாரிகள் சென்றபோது, 56 வயது ஆடவர் பேச்சுமூச்சின்றிக் கிடந்ததை அவர்கள் கண்டனர்.

அவர் சம்பவ இடத்திலேயே மாண்டது உறுதிசெய்யப்பட்டது.

சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரணதண்டனை விதிக்கப்படலாம்.

காவல்துறையின் விசாரணை தொடர்கிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்