Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சாங்கி விமான நிலையத்தில் தொந்தரவு கொடுத்து, ஊழியரை அச்சுறுத்திய சந்தேகத்தில் ஆடவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்படும்

வாசிப்புநேரம் -
சாங்கி விமான நிலையத்தில் தொந்தரவு கொடுத்து, ஊழியரை அச்சுறுத்திய சந்தேகத்தில் ஆடவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்படும்

(படம்: AFP/Roslan Rahman)

சாங்கி விமான நிலையத்தில் தொந்தரவு கொடுத்து விமான நிலையத்தின் இடைவழிப் பேருந்து ஓட்டுநரை அச்சுறுத்தியதாக நம்பப்படும் 30 வயது ஆடவர் குற்றஞ்சாட்டப்படவிருக்கிறார்.

இவ்வாண்டு ஜனவரி 31ஆம் தேதி பிற்பகல் சுமார் 2.10 மணிக்குச் சம்பவம் குறித்துப் புகார் கிடைத்தது என்று காவல்துறை தெரிவித்தது.

விமான நிலையத்தின் இடைவழிப் பேருந்து ஓட்டுநர் தடம் மாறியதால் சந்தேக நபர் தமது தனியார் வாடகைக் காரைக் கொண்டு அதனை வழிமறித்ததாகக் கூறப்படுகிறது.

காரைவிட்டு வெளியேறிய ஆடவர், தகாத வார்த்தைகளைக் கொண்டு ஓட்டுநரைத் திட்டியதாகத் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் ஓட்டுநர் பேருந்தை ஓட்டிச் செல்ல முயன்றபோது சந்தேக நபர் பேருந்தின் கதவை எட்டி உதைத்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

அத்துடன் ஆடவர் தமது கைத்தொலைபேசியையும் அப்பக்கம் வீசியெறிந்ததாகச் சொல்லப்பட்டது.

சந்தேக நபர் சம்பவ இடத்திலேயே கைதுசெய்யப்பட்டார்.

அவர் மீது நாளை மறுநாள் (14 மார்ச்) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்