Skip to main content
ராபிள்ஸ் பிளேஸில் பள்ளிவாசலுக்கு வெளியே தீ வைத்த சந்தேகம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

ராபிள்ஸ் பிளேஸில் பள்ளிவாசலுக்கு வெளியே தீ வைத்த சந்தேகம் - ஆடவர் கைது

வாசிப்புநேரம் -
ராபிள்ஸ் பிளேஸில் பள்ளிவாசலுக்கு வெளியே தீ வைத்த சந்தேகம் - ஆடவர் கைது
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 26 Sep 2026 09:45AM புதுப்பிப்பு : 26 Sep 2026 01:28PM

ராபிள்ஸ் பிளேஸில் (Raffles Place) இருக்கும் பள்ளிவாசலுக்கு வெளியே தீ வைத்ததாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர் மீது இன்று (26 செப்டம்பர்) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவிருக்கிறது. 

சந்தேக நபர் 50 வயது சீன ஆடவர் என்று காவல்துறை தெரிவித்தது.

நேற்றிரவு சுமார் 9 மணிக்குத் தீ குறித்து காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.

மௌலானா முகமது அலி (Masjid Moulana Mohamed Ali) பள்ளிவாசலுக்கு வெளியே எண்ணெய்க் கலனை ஆடவர் வைத்ததாகக் கூறப்படுகிறது.

அதற்குள் ஆடை ஒன்றை வைத்து அவர் தீ மூட்டியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

பிறகு அவர் அங்கிருந்து சென்றுவிட்டார். 

பொதுமக்களில் ஒருவர் தீயை அணைத்தார்.

யாரும் காயமடையவில்லை.

தகவல் கிடைத்த மூன்று மணி நேரத்தில் ஆடவர் கைது செய்யப்பட்டார். 

குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஓராண்டுவரை சிறை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்