காவல்துறை அதிகாரிகளிடம் தகாத பேச்சு - ஆடவர் கைது
வாசிப்புநேரம் -
(படம்: Envato Elements)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
காவல்துறை அதிகாரிகளிடம் அவதூறாகப் பேசி அவர்கள் பணிக்கு இடையூறாக இருந்ததாய் ஆடவர் ஒருவர் மீது குற்றஞ்சாட்டப்படவுள்ளது.
சம்பவம் இம்மாதம் 3ஆம் தேதி நடந்தது.
யீஷூன் ரிங் ரோடு புளோக் 381இல் ஏற்பட்ட தீச்சம்பவத்தின் தொடர்பில் அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டிருந்தனர்.
43 வயதாகும் அந்த ஆடவர் அதிகாரிகளிடம் தகாத முறையில் பேசியதாகவும் தொடர்ந்து கூச்சலிட்டு அவர்களுக்கு இடையூறாக இருந்ததாகவும் காவல்துறை சொன்னது.
ஆடவரைக் கட்டுபடுத்த முயன்றபோது அவர் அதிகாரி ஒருவர் மீது எச்சில் உமிழ்ந்தார் என்றும் கூறப்பட்டது.
அதிகாரிகள் ஆடவரைக் கைது செய்தனர்.
நாளை அவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆடவருக்கு அதிகபட்சம் 4 ஆண்டுச் சிறை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

ஆதாரம் : Mediacorp Seithi