Skip to main content
காவல்துறை வாகனத்தில் கீறல் ஏற்படுத்திய ஆடவர்?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

காவல்துறை வாகனத்தில் கீறல் ஏற்படுத்திய ஆடவர்? - நாளை குற்றச்சாட்டு

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

காவல்துறை வாகனத்தில் கீறலை ஏற்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர் மீது நாளை குற்றஞ்சாட்டப்படவிருக்கிறது.

நாசவேலை செய்ததாக 53 வயது ஆடவர் மீது குற்றச்சாட்டு கொண்டுவரப்படும்.

அவர் ரெட்ஹில் குளோஸ் (Redhill Close) அடுக்குமாடி வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தைக் கீறியதாகச் சொல்லப்பட்டது.

கடந்த வியாழக்கிழமை (2 ஏப்ரல்) மாலை 7.40 மணியளவில் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.

அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் செல்லும் முன்னர் ஆடவர் தப்பிச்சென்றார்.

விசாரணையின் மூலம் அதிகாரிகள் சந்தேக நபரை அடையாளங்கண்டு நேற்று அவரைக் கைது செய்தனர்.

அவர் சாவியை வைத்து வாகனத்தின் கதவில் கீறலை ஏற்படுத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

நாசவேலை செய்பவர்களுக்கு அதிகபட்சம் 2,000 வெள்ளி அபராதம் அல்லது மூவாண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

அவர்களுக்கு மூன்று முதல் எட்டுப் பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.

ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்