சண்டையை விலக்க முயன்ற வெளிநாட்டு ஊழியரின் விரலைக் கடித்த மற்றொரு ஊழியருக்குச் சிறை
வாசிப்புநேரம் -

(படம்: CNA/Jeremy Long)
சிங்கப்பூரில் ஆடவரின் இடது கை ஆள்காட்டி விரல் நுனியைக் கடித்த நபருக்கு 10 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
40 வயது நிரம்பிய இந்தியாவைச் சேர்ந்த தங்கராசு ரெங்கசாமி நேற்று முன்தினம் (செப்டம்பர் 15) தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.
சம்பவம் நடந்தபோது அவர் மண் தோண்டும் இயந்திர வாகனத்தை இயக்குபவராகப் பணிபுரிந்தார்.
காக்கி புக்கித்தில் உள்ள தங்கும் விடுதியில் வெளிநாட்டு ஊழியராக வசித்துவந்தார்.
இவ்வாண்டு ஏப்ரல் 22ஆம் தேதியன்று, தங்கராசு அவருடைய நண்பர் ராமமூர்த்தியோடு மதுபானம் அருந்திக்கொண்டிருந்தார்.
அப்போது போதையில் இருந்த தங்கராசு சத்தமாகப் பேசியிருக்கிறார்.
அருகே இருந்த ஆறுமுகம் சங்கர் என்ற நபர் அமைதியாகப் பேசும்படி அவரைக் கேட்டுக்கொண்டார்.
சச்சரவு பெரிதானதில் ஆறுமுகம் சங்கர் தங்கராசுவை அறைந்தார்.
இருவரையும் சண்டையிடாமல் விலக்க முயன்றார் அங்கிருந்த நாகூரன் பாலசுப்ரமணியன் என்ற ஆடவர்.
அப்போது "நாகூரனின் இடது ஆள்காட்டி விரல் தங்கராசுவின் வாய்க்குள் சென்றதாக" நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தங்கராசு அவரது விரலைக் கடுமையாகக் கடித்து விடுவிக்காமல் இருந்தார் என்று கூறப்பட்டது.
சில வினாடிகளுக்குப் பிறகு நாகூரன் தம்முடைய விரலை விடுவித்துக்கொண்டார்.
தங்கராசு அங்கிருந்து தப்பி ஓடித் தங்கும் விடுதிக்குத் திரும்பினார்.
நாகூரன் விரலின் நுனி துண்டிக்கப்பட்டது பின்னர் தெரியவந்தது.
ஆள்காட்டி விரலின் ஒரு பகுதியை இழந்தது நாகூரனுக்கு நிரந்தர இடையூற்றை விளைவித்திருப்பதாய் அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
தங்கராசுவின் குற்றத்துக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம், பிரம்படிகள் விதிக்கப்பட்டிருக்கலாம்.