சட்டவிரோதப் பயணம், கடத்தல் சிகரெட்- சிங்கப்பூரில் பிடிபட்ட மலேசியருக்குச் சிறை
வாசிப்புநேரம் -
கோப்புப் படம்: CNA/Syamil Sapari
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
மலேசியாவிலிருந்து 5 பயணிகளைச் சட்டவிரோதமாகச் சிங்கப்பூருக்குள் ஏற்றிவந்த மலேசிய ஆடவர் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் பிடிபட்டார்.
அவர் பயணிகளிடம் 100 ரிங்கிட் வாங்கியிருந்தது தெரியவந்தது.
அவரிடம் கடத்தல் சிகரெட்டுகளும் இருந்தன. தீர்வை செலுத்தப்படாத அந்தச் சிகரெட்டுகளின் மதிப்பு 42,000 வெள்ளி. எங் சோ கிட் (Ng Choh Kit) எனும் அந்த 42 வயது மலேசியருக்கு 9 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
சட்டவிரோதப் பயணத்துக்கு அவருக்கு 1,800 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது. சிங்கப்பூரில் வாகனமோட்டும் உரிமம் பெறவும் வாகனம் ஓட்டவும் அவருக்கு 12 மாதத் தடையும் விதிக்கப்பட்டது.
அபராதத்தைச் செலுத்த முடியாததால் அவருக்குக் கூடுதலாக 6 நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
எங் கடந்த மே 18ஆம் தேதி மாலை 4.40 மணியளவில் மலேசியாவில் பதிவுசெய்யப்பட்ட வாகனத்தை உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடிக்கு ஓட்டிவந்தபோது சோதிக்கப்பட்டார்.

ஆதாரம் : CNA