கோடரியால் பெண்ணைத் தாக்கியதாக 30 வயது இந்திய ஆடவர் மீது குற்றச்சாட்டு
This audio is generated by an AI tool.
இந்தோனேசியப் பெண்ணைக் கோடரியைக் கொண்டு கொலை செய்ய முயன்றதாக 30 வயது இந்திய ஆடவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
சம்பவம் நேற்று முன்தினம் (11 பிப்ரவரி) காலை சுமார் 7.05 மணிக்கு 11, சிம்ஸ் வியூவில் (Sims View) நடந்தது.
இந்தியாவைச் சேர்ந்த பன்னீர்செல்வம் ஐய்யப்பன் (Panneer Selvam Ayyappan) இந்தோனேசியப் பெண்ணைப் பலமுறை கோடரியால் தாக்கியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
இந்தோனேசியாவைச் சேர்ந்த 30 வயது ஃபாஜார் நூர் அய்னியின் (Fajar Nur Aini) தலையிலும், கழுத்திலும், கைகளிலும் காயம் ஏற்பட்டது.
பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பன்னீர்செல்வமும் நூர் அய்னியும் ஏற்கனவே அறிமுகமானவர்கள் என்று காவல்துறை சொன்னது.
பன்னீர்செல்வம் அடுத்த வெள்ளிக்கிழமை (20 பிப்ரவரி) மீண்டும் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்.
கொலை முயற்சி நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள்தண்டனையுடன் பிரம்படிகள் விதிக்கப்படலாம்.