Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

தேர்தல் நாளன்று PAP பதாகைகளைக் கிழித்ததாக ஆடவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் பொதுத்தேர்தல் நடந்தபோது ஹவ்காங் (Hougang) வட்டாரத்தில் மக்கள் செயல் கட்சியின் (PAP) பதாகைகளைக் கிழித்துத் தொல்லை விளைவித்ததாக செங் குவான் ஹெங் (Seng Guan Heng) எனும் ஆடவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அவர் மீது 5 குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. சேட்டை செய்தது, வேண்டுமென்றே துன்புறுத்தியது, குடிபோதையில் மோசமாக நடந்துகொண்டது ஆகிய குற்றச்சாட்டுகள் அதிலடங்கும்.

அவர் மே 3ஆம் தேதி புளோக் 328 ஹவ்காங் அவென்யூ 5இல் உள்ள (Block 328, Hougang Avenue 5) திறந்தவெளிக் கார் நிறுத்துமிடத்தில் இரவு 11.20 மணியளவில் PAPஇன் 2 கொடிக் கம்பங்களையும் 5 பதாகைகளையும் சேதப்படுத்தியதாகக் கூறப்பட்டது. அவற்றின் மதிப்பு 205 வெள்ளி என்று கணக்கிடப்பட்டுள்ளது.

அவர் PAP தொண்டூழியர்களிடம் தகாத வார்த்தைகள் பேசியதாகவும் ஆபாசமான சைகைகளைக் காட்டியதாகவும் குடிபோதையில் உரக்கக் கத்தி, இரண்டு ஆடவர்களை நெஞ்சில் கைவைத்துத் தள்ளியதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு அதற்கேற்ற தண்டனைகள் விதிக்கப்படும்.

அவற்றில் சில:

சேட்டை செய்ததற்கு அதிகபட்சம் ஈராண்டுகள் சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

வேண்டுமென்றே துன்புறுத்திய குற்றத்துக்கு 6 மாதங்கள் வரை சிறை, 5,000 வெள்ளி வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

குடிபோதையில் மோசமாக நடந்துகொண்ட குற்றத்துக்கு 6 மாதங்கள் வரை சிறை, ஆயிரம் வெள்ளி வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
 
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்