எட்டோமிடேட் போதையில் மரணம் விளைவித்ததாக ஆடவர்மீது நாளை குற்றச்சாட்டு
வாசிப்புநேரம் -
(படம்: SPF)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
எட்டோமிடேட் (etomidate) ரசாயனத்தைப் பயன்படுத்திய நிலையில் வாகனமோட்டி, மரணம் விளைவித்ததாக ஆடவர்மீது நாளை குற்றஞ்சாட்டப்படவுள்ளது.
சம்பவம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் இரவு 11.45 மணியளவில் நடந்தது.
பிப்பிட் ரோட்டில் (Pipit Road) ஆடவர் ஓட்டிச்சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து வாகன நிறுத்துமிடத் தடுப்பில் மோதியது.
பின்னர் சாலையோரத்திலிருந்த தற்காலிக இரவுச் சந்தைக் கடையை மோதியது.
அங்கிருந்த கடை ஊழியரான 66 வயது மாது சம்பவ இடத்திலேயே மாண்டார்.
ஓட்டுநர் அவருக்கு உதவவில்லை. காரை விட்டுவிட்டு மற்றோர் ஆண் பயணியுடன் தப்பிச்சென்றதாகக் காவல்துறை தெரிவித்தது.
மறுநாள் காவல்துறை ஓட்டுநரைக் கைதுசெய்தது.
அவர் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கவில்லை என்பது விசாரணையில் தெரியவந்தது.
வாகனமோட்டுவதற்கு முன்பு எட்டோமிடேட் ரசாயனம் கலந்த மின்சிகரெட்டைப் பயன்படுத்தியதும் தெரியவந்தது.
- போதைப்பொருளின் தாக்கத்தில் வாகனமோட்டியது,
- ஆபத்தான முறையில் வாகனமோட்டி மரணம் ஏற்படுத்தியது,
- உரிமமின்றி வாகனமோட்டியது,
- விபத்துக்குப் பிறகு உதவத் தவறியது
உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர்மீது சுமத்தப்படவுள்ளன.

ஆதாரம் : Mediacorp Seithi