Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

பிரதமர் வோங்கிற்கு அனுப்பிய மின்னஞ்சலில் போலி வெடிகுண்டு மிரட்டல் - ஆடவர் மீது குற்றச்சாட்டு

வாசிப்புநேரம் -
பிரதமர் வோங்கிற்கு அனுப்பிய மின்னஞ்சலில் போலி வெடிகுண்டு மிரட்டல் - ஆடவர் மீது குற்றச்சாட்டு

படம்: CNA/Ili Mansor

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

நாடாளுமன்றக் கட்டடம், உள்துறை அமைச்சின் அறிவியல், தொழில்நுட்ப அமைப்பு ஆகிய இரண்டையும் குறிவைத்து போலி வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக ஆடவர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

40 வயது கோ ஜாய் ஷியாங் (Koh Jye Shyang) சென்ற வெள்ளிக்கிழமை (3 ஜூலை) இணையம்வழி அறிவியல், தொழில்நுட்ப அமைப்பிற்குப் போலி வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார்.

அமைப்பு செயல்படும் கட்டடத்தில் வெடிகுண்டு இருப்பதாகவும் அனைவரும் உடனே வெளியேற வேண்டும் என்றும் அவர் கூறியதாக நம்பப்படுகிறது.

திங்கட்கிழமை (6 ஜூலை) அன்று நாடாளுமன்றக் கட்டடத்தில் வெடிகுண்டு இருப்பதாய்ப் பிரதமர் லாரன்ஸ் வோங்கிற்கு (Lawrence Wong) கோ மின்னஞ்சல் அனுப்பியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

இரு சம்பவங்கள் குறித்தும் காவல்துறைக்குத் தகவல் தரப்பட்டது.

காவல்துறை நடத்திய சோதனையில் பாதுகாப்பு அக்கறைக்குரிய பொருள்கள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இரு மிரட்டல்களையும் விடுத்தது ஒரே நபர் தான் என்று நம்பப்படுகிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் கோவிற்கு 7 ஆண்டுவரை சிறை, 50,000 வெள்ளி வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்