Skip to main content
பூன் லே வீட்டில் ஆடவர் மரணம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பூன் லே வீட்டில் ஆடவர் மரணம் - 'சகோதரர்' மீது கொலைக் குற்றச்சாட்டு

வாசிப்புநேரம் -
பூன் லே அவென்யூவில் உள்ள வீட்டில் மாண்டுகிடக்கக் காணப்பட்ட 56 வயது ஆடவரைக் கொன்றதாக 58 வயது ஆடவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

2 நாளுக்கு முன் ஆடவரின் உடல் வீட்டில் காணப்பட்டது.

குற்றச்சாட்டை எதிர்நோக்கும் அப்துல் ராணி பின் முகமது அரிஃபின் (Abdul Rani Bin Md Ariffin) அரசு நீதிமன்றத்தின் காணொளியில் தோன்றினார்.

அவர் சிங்கப்பூரர்.

57 வயது அப்துல் ரஹமான் முகமது அரிஃபினைக் கொலை செய்ததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

கொலையுண்டவர் குற்றஞ்சாட்டப்பட்டவரின் சகோதரர் என்று CNA அறிகிறது.

குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு மனோவியல் பரிசோதனை நடத்த அவரைத் தடுப்புக்காவலில் வைக்க அரசுத்தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்திடம் கேட்டுக்கொண்டார்.

ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா என்று கேட்டபோது எதுவும் இல்லை என்று அப்துல் ராணி பதிலளித்தார்.

வழக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்