அங் மோ கியோ கொலை - 67 வயதுப் பெண்ணைக் கொலை செய்ததாக 66 வயது ஆடவர் மீது குற்றச்சாட்டு
வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் அங் மோ கியோ வட்டாரத்தில் நேற்று (29 நவம்பர்) மாண்டுகிடக்கக் காணப்பட்ட 67 வயதுப் பெண்ணைக் கொலை செய்ததாக 66 வயது ஆடவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
புளோக் 125 அங் மோ கியோ அவென்யூ 6இல் உள்ள கழக வீட்டில் கொலை சம்பவம் நேர்ந்ததாக நம்பப்படுகிறது.
சிங்கப்பூரர் இங் சென் ஹெங் (Ng Chen Heng), லிம் சுவான் லியெனைக் (Lim Suan Lian) கொலை செய்ததாக இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
இங் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார்.
நேற்று (29 நவம்பர்) அதிகாலை 1.25 மணியளவில் சம்பவம் குறித்துத் தகவல் பெற்றதாகக் காவல்துறை கூறியது.
இதற்குமுன், சந்தேக நபருக்கும் மாண்ட பெண்ணுக்கும் பல முறை வாக்குவாதங்கள் நடந்திருப்பதாக அண்டை வீட்டார் கூறினர்.
சந்தேக நபர் பல முறை வீட்டுக்குள் செல்ல முடியாதபடி வெளியே விட்டுக் கதவு பூட்டப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.
அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் கடுமையாகும்போது பல தடவை காவல்துறை அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கொலைக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படலாம்.

ஆதாரம் : CNA