சட்டவிரோதமாகத் தங்கிய பெண்ணுக்கு அடைக்கலம் : சிங்கப்பூரர் மீது குற்றச்சாட்டு
வாசிப்புநேரம் -
படம்: கோப்புப் படம்/State Courts in Singapore
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
குடிநுழைவுக் குற்றம் புரிந்தவர் தங்குவதற்கு இடம் கொடுத்ததாக சிங்கப்பூரர் மீது குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் குற்றஞ்சாட்டியுள்ளது.
ஆணைய அதிகாரியின் சோதனைக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
30 வயது ஷாரிஸால் பின் சைடோன் ( Sharizal Bin Saidon) 30 வயது அல்ஃபீரா மொங்கான் (Alfira Mongan) தங்குவதற்கு இடம் கொடுத்தார்.
2023ஆம் ஆண்டு மே மாதம் அல்ஃபீராவின் சிறப்பு அனுமதி (Special pass) காலாவதியானது.
இருப்பினும், 2023ஆம் ஆண்டு மே மாதம் முதல் இவ்வாண்டு மே மாதம் வரை அவர் சட்டவிரோதமாக சிங்கப்பூரில் தங்குவதற்கு ஷாரிஸால் உதவியதாகத் தெரிகிறது.
ஹவ்காங் அவென்யூ 5இல் (Hougang Avenue 5) இருக்கும் ஷாரிஸாலின் வீட்டில் அல்ஃபீரா தங்கியிருந்தது விசாரணையில் தெரியவந்தது.
இவ்வாண்டு மே மாதம் 26ஆம் தேதி அதிகாரி சோதனை நடத்தச் சென்றபோது அல்ஃபீரா ஒளிந்துக்கொள்ளும்படி ஷாரிஸால் கூறியதாகத் தெரிகிறது.
அல்ஃபீராவின் கைத்தொலைபேசியில் இருந்த குறுந்தகவல்களையும் அவர் அகற்றச் சொல்லியிருந்தார்.
அல்ஃபீராவுக்கு 14 வாரச் சிறைத்தண்டனை, 2,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.
சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்பட்டு அவர் மீண்டும் சிங்கப்பூர் வரத் தடை விதிக்கப்பட்டது.
வேண்டுமென்றே சட்டவிரோதக் குடியேறிகளுக்குத் தங்குமிடம் வழங்கினால் 6 மாதம் முதல் 2 ஆண்டுவரை சிறைத்தண்டனையும் 6,000 வெள்ளி வரை அபராதமும் விதிக்கப்படலாம்.
ஆணைய அதிகாரியின் சோதனைக்கு இடையூறு ஏற்படுத்தினால் 4,000 வெள்ளி வரை அபராதம், ஓராண்டு வரை சிறைத்தண்டனை, அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

ஆதாரம் : Mediacorp Seithi