Scoot விமானத்தில் பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு
(கோப்புப் படம்: Reuters/Edgar Su)
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரிலிருந்து புறப்பட்ட Scoot விமானத்தில் பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாக ஆடவர் ஒருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த 52 வயது ஆடவர் பக்கத்தில் அமர்ந்திருந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவம் நேற்று முன்தினம் (13 ஏப்ரல்) ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருக்குச் சென்றுகொண்டிருந்த விமானத்தில் நடந்தது.
ஆடவர் குறித்து விமானச் சிப்பந்திகளிடம் பெண் முதலில் கூறியிருந்தார்.
சிப்பந்திகள் பெண்ணை வேறு இருக்கைக்கு மாற்றினர்.
விமானம் பெர்த்தில் தரையிறங்கியவுடன் காவல்துறையினர் ஆடவரைத் தடுத்துவைத்தனர்.
அவர் மீது விசாரணை நடத்தப்படுகிறது.
அனுமதியின்றிப் பாலியல் உறவில் ஈடுபட்டதாகவும், அநாகரிக நடத்தையைக் கொண்டிருந்ததாகவும் ஆடவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.
அனுமதியின்றிப் பாலியல் உறவில் ஈடுபட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டால் 12 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
அநாகரிக நடத்தைக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.