தேசிய தின அணிவகுப்பில் கண்கலங்கிய இளையர்...யார் அவர்?
CNA/Mak Jia Kee, Mediacorp
This audio is generated by an AI tool.
இவ்வாண்டின் தேசிய தின அணிவகுப்பில் மக்களின் மனத்தில் நிலைத்து நின்ற தருணங்கள் பல....
அவற்றில் ஒன்று....
உணர்ச்சிகள் மேலோங்கத் தேசியக் கீதத்தைப் பாடிய இளையர்...
17 வயது டூ அங் வாய் (Htoo Ank Wai) சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்தவர். பெற்றோர் மியன்மாரைச் சேர்ந்தவர்கள் என்றும் தாம் இங்கு நிரந்தரவாசி என்றும் அவர் CNAயிடம் சொன்னார்.
அங் வாய் தற்போது தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் உயர் நைட்டெக் மாணவராக இருக்கிறார்.
அவர் தேசிய தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் நடனம் ஆடினார். அதை நினைத்துப் பெருமைப்படுவதாக அவர் சொன்னார்.
அவர் உணர்ச்சிவசப்பட்டு அழுதபடியே தேசியக் கீதத்தைப் பாடியதைக் காட்டும் காணொளி பலரது மனத்தைத் தொட்டது.
அந்த நேரத்தில் மியன்மாரில் இருக்கும் தமது பாட்டிகள் மனத்தில் தோன்றியதாக அங் வாய் சொன்னார்.
கவலை வந்தால் நாடு திரும்பிவிடும்படி பாட்டிகள் கூறினர்.
ஆனால் அங் வாய் இங்கே சொகுசாக இருப்பதாகச் சொன்னார்.