Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

விமானச் சிப்பந்தியிடம் ஆபாசமாய் நடந்துகொண்ட ஆடவர் மீது குற்றச்சாட்டு

வாசிப்புநேரம் -
விமானச் சிப்பந்தியிடம் ஆபாசமாய் நடந்துகொண்ட ஆடவர் மீது குற்றச்சாட்டு

படம்: CNA/Syamil Sapari

விமானச் சிப்பந்தியிடம் ஆபாசமாய் நடந்துகொண்ட 23 வயது ஆடவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சிங்கப்பூருக்கு வந்துகொண்டிருந்த விமானத்தில் அந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்பட்டது.

இந்தோனேசியாவைச் சேர்ந்த பிரிலியண்ட் ஆங்ஜயா (Brilliant Angjaya) இருக்கையில் அமர்ந்திருந்தபோது விமானச் சிப்பந்தியிடம் தம்முடைய பிறப்பு உறுப்பைக் காட்டியிருக்கிறார்.

விமானச் சிப்பந்தி உடனடியாக அது பற்றி தம்முடைய 
மேலதிகாரியிடம் புகார் செய்தார்.

விமானம் சாங்கி விமான நிலையத்தில் தரையிறங்கியவுடன் அவர் கைதுசெய்யப்பட்டார்.

அவருடைய கைத்தொலைபேசியும் பறிமுதல் செய்யப்பட்டது.

இன்று நீதிமன்றத்திற்கு வந்திருந்த ஆங்ஜயா குற்றத்தை ஒப்புக்கொள்ளவிருப்பதாகத் தெரிவித்தார்.

தம்முடைய செயலை நினைத்து வருந்துவதாகவும் அவர் சொன்னார்.

அவருடைய வழக்கு இம்மாதம் (மார்ச்) 24ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்