Skip to main content
தேர்தல் அதிகாரியின் கையைத் தடவிய ஆடவருக்கு அபராதம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

தேர்தல் அதிகாரியின் கையைத் தடவிய ஆடவருக்கு அபராதம்

வாசிப்புநேரம் -
வாக்களிப்பு நிலையத்தில் தேர்தல் அதிகாரியின் கையைத் தடவிய ஆடவருக்கு 500 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டு (2023) அதிபர் தேர்தலில் வாக்களிக்கக் காத்திருந்தபோது 51 வயது விக்ரமசிங்க ஆஷ்லி அனுரா (Wickramasinghe Ashley Anura), 31 வயதுப் பெண் அதிகாரியின் கையைத் தடவினார்.

அந்தப் பெண் தொடக்கப்பள்ளி ஆசிரியர் என்றும் சம்பவம் கேலாங்கில் உள்ள வாக்களிப்பு நிலையத்தில் நடந்தது என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

சென்ற ஆண்டு செப்டம்பர் முதல் தேதி விக்ரமசிங்க அவரின் காதலியுடன் வாக்களிக்கச் சென்றிருந்தார்.

அவர் அப்போது மது அருந்தி இருந்ததாகப் பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி குறிப்பிட்டார்.

அவர் பெண்ணின் கையைத் தடவியதும் அந்தப் பெண் உடனே கையை எடுத்துவிட்டார்.

சம்பவத்தை மூத்த வாக்களிப்பு நிலைய அதிகாரியும் நேரில் கண்டார்.

அவர் நிறுத்துமாறு விக்ரமசிங்கவைக் கேட்டுக்கொண்டார்.

காவல்துறையினர் அழைக்கப்பட்டனர்.

விக்ரமசிங்க கைது செய்யப்பட்டார்.

அவர் அபராதத்தை முழுமையாகச் செலுத்திவிட்டார்.

குற்றவியல் துன்புறுத்தலுக்கு அதிகபட்சம் 3 மாதம் சிறைத்தண்டனை அல்லது அதிகபட்சம் 1,500 வெள்ளி அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்