Skip to main content
ஊட்ரம் பார்க் MRT நிலையத்தில் சிறுநீர் கழித்தவருக்கு $2,000 அபராதம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஊட்ரம் பார்க் MRT நிலையத்தில் சிறுநீர் கழித்தவருக்கு $2,000 அபராதம்

வாசிப்புநேரம் -
ஊட்ரம் பார்க் MRT நிலையத்தில் சிறுநீர் கழித்தவருக்கு  $2,000 அபராதம்

(படம்: CNA/Jeremy Long)

சிங்கப்பூரின் ஊட்ரம் பார்க் ரயில் நிலையத்தின் (Outram Park MRT) மின்படியில் சிறுநீர் கழித்த ஆடவருக்கு 2,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

லீ குவோருய் (Li Guorui) எனும் அந்த 41 வயது சீன நாட்டவர் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.

வியாபாரப் பயணமாக அவர் ஜனவரி 2ஆம் தேதி சிங்கப்பூருக்கு வந்தார்.

சைனாடவுன் அப்பர் க்ரோஸ் ஸ்ட்ரீட்டில் (Upper Cross Street, Chinatown) உள்ள ஹோட்டலில் தங்கினார்.

ஜனவரி 10ஆம் தேதி வெஸ்கேட் கடைத்தொகுதியில் (Westgate Mall) இரவு 9 மணி வரை விருந்தில் கலந்துகொண்டு ஹோட்டலுக்குத் திரும்பியபோது சம்பவம் நிகழ்ந்தது.

அளவுக்கதிகமாக பீர் குடித்திருந்த லீ போதையில் இருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இரவு 10 மணிக்கு ஊட்ரம் பார்க் MRT நிலையத்திலிருந்து வெளியேறிய அவர் மின்படியில் சிறுநீர் கழித்தார்.

பொதுமக்களில் சிலர் காணொளி எடுத்தனர். அவை பின்னர் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன. பொதுமக்களில் ஒருவர் சம்பவம் பற்றி ஜனவரி 11ஆம் தேதி SGSecure செயலி வழியாகப் புகார் தந்தார்.

12ஆம் தேதி காவல்துறை லீயை அடையாளம் கண்டு கைதுசெய்தது.

அவர் மீது நேற்று (13 ஜனவரி) குற்றஞ்சாட்டப்பட்டது.
ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்