Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

உயர் சம்பள வேலைகளில் சேரப் போலிச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்தவருக்குச் சிறை

வாசிப்புநேரம் -

போலிச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்து உயர் சம்பள வேலையில் சேர முனைந்ததாக ஒருவர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். 

யோ கெங் சுவீ (Yeoh Keng Swee) என்ற அந்த 55 வயது ஆடவருக்கு 15 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 

அவர் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், தேசியப் பல்கலைக்கழகம் போன்றவற்றிலிருந்து பெறப்பட்டதுபோல் போலிச் சான்றிதழ்களைத் தயாரித்துச் சமர்ப்பித்தார். 

உயர் பதவிகளில் வேலை பெற அவர் அவ்வாறு செய்தார் என்று கூறப்பட்டது. 

போலிச் சான்றிதழ்களை எவ்வாறு தயாரித்தார்?

பல்கலைக்கழகத்திலிருந்து பெறப்பட்ட சான்றிதழ் மாதிரிகளின் மேல் அவரது பெயரையும் தகவல்களையும் ஒட்டிக்கொண்டு அவற்றைப் பிரதி எடுத்தார் அவர். 

அவர் 2009ஆம் ஆண்டிலிருந்தே அவ்வாறு செய்துவந்ததாக நம்பப்படுகிறது. 

அவர் 2020ஆம் ஆண்டில் கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்ய விண்ணப்பித்தபோது, அவரது சான்றிதழ்களை நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்துடன் நிறுவனம் சரிபார்த்தது. 

அப்போதுதான் அவர் போலிச் சான்றிதழ்களை ஒப்படைத்தார் என்று தெரியவந்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்