விநியோக ஓட்டுநர் மாண்ட விபத்தில் காரை ஓட்டவில்லை என்று பொய் சொன்னவருக்குச் சிறை
வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
விபத்தில் சிக்கிய காரைத் தாம் ஓட்டவில்லை என்று
பொய் சொன்ன ஆடவருக்கு 4 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
39 வயது தியோ கோக் மெங் (Teo Kok Meng) விநியோக ஓட்டுநர்மீது மோதி மரணத்தை விளைவித்தார். ஆனால் அவர் கார் ஓட்டுநர் இல்லை என்று பொய் சொல்லி நீதியைத் தடுத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.
குற்றச்சாட்டைத் தியோ ஒப்புக்கொண்டார்.
அரசாங்க அதிகாரியிடம் பொய்த்தகவலை வழங்கியதாகவும் அவர்மீது குற்றஞ்சுமத்தப்பட்டது.
விபத்து 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி நடந்தது.
தியோ தமது பெண் தோழியுடனும் நண்பர் ஜாக்கி டானுடனும் (Jackie Tan) மது அருந்திவிட்டுக் காரை ஓட்டினார்.
அப்போது 28 வயது விநியோக ஓட்டுநர் சாமுவல் சீட் (Samuel Seet) மீது மோதினார்.
திரு சாமுவல் தம்முடைய மோட்டார்சைக்கிளிலிருந்து வீசப்பட்டு சாலையில் விழுந்தார்.
மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அவர் பிறகு மாண்டார். அப்போதுதான் அவருக்குத் திருமணம் நடந்ததாகக் கூறப்பட்டது.
விசாரணையின்போது தியோ காரை ஓட்டவில்லை என்று சொன்னார்.
தியோவைப் பாதுகாக்க அவருடைய நண்பர் டான் தாமே காரை ஓட்டியதாகப் பொய் சொன்னார்.
டான் பிறகு உண்மையைக் கூறினார்.
தீர்ப்பளித்த நீதிபதி விபத்துக்குத் தியோ தான் பொறுப்பு என்று குறிப்பிட்டார்.
நீதியைத் தடுக்கும் குற்றத்துக்கு 7 ஆண்டுவரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

ஆதாரம் : CNA