Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பறவைக்கூண்டைக் காதலி மீது வீசியவருக்குச் சிறை

வாசிப்புநேரம் -
பறவைக்கூண்டைக் காதலி மீது வீசியவருக்குச் சிறை

(படம்:Ili Nadhirah Mansor/TODAY)

காதல் ஜோடி ஒன்றுக்கு இடையே ஏற்பட்ட சண்டை வன்முறையில் முடிந்தது.

விக்னேஸ்வரன் ஜகதீசன் (Vicnesvaran Jagadisan) எனும் ஆடவர் ஆத்திரத்தில் ஒரு கிலோ எடை கொண்ட உலோகப் பறவைக்கூண்டைத் தமது காதலி மீது வீசியுள்ளார்.

இதற்குமுன்னர் நடந்த சம்பவத்தில், விக்னேஸ்வரன் தம்மிடமிருந்து திருடியதாகக் காதலி புகார் அளித்துள்ளார்.

அப்போது விக்னேஸ்வரன் காவல்துறையினர்முன் முகத்தைக் குத்தி உடைக்கப்போவதாக அவரது காதலியை மிரட்டியுள்ளார்.

மற்றவர்களின் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல் ஆவேசமாக நடந்துகொண்டது, மிரட்டல் விடுத்தது ஆகிய குற்றங்களை அந்த 42 வயது சிங்கப்பூரர் ஒப்புக்கொண்டார்.

அவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை (மே 26) ஒரு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

நடந்தது என்ன?

2022 ஜூலை 24ஆம் தேதி தாங்கள் வளர்த்துவரும் நாய்களை யார் பார்த்துக்கொள்வது என்பது தொடர்பில் விக்னேஸ்வரனுக்கும் அவரது காதலி லக்ஷ்மி கார்த்திகா சுப்ரமணியத்துக்கும் (Lakshmi Karthiga Subramaniam) வாக்குவாதம் எழுந்தது.

வாக்குவாதம் முற்றிச் சண்டை ஏற்பட்டது.
விக்னேஸ்வரன் பறவைக்கூண்டை லக்ஷ்மி மீது வீசினார்.

சம்பவத்தில் லக்ஷ்மி காயமடையவில்லை என்றாலும் விக்னேஸ்வரனின் வன்மமான செயலைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளமுடியாது என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

அதிகபட்ச தண்டனை

மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் அலட்சியமாக நடந்துகொள்வோருக்கு 2,500 வெள்ளி வரை அபராதம் அல்லது 6 மாதங்கள் வரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

கடுமையான காயங்கள் விளைவிப்போருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
 
ஆதாரம் : Today

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்