நான்கு வயதுச் சிறுவனை அறைந்த ஆடவருக்கு 14 வாரச் சிறை
வாசிப்புநேரம் -
(படம்: CNA)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
பாலர் பள்ளியில் பயிலும் நான்கு வயதுச் சிறுவனை அறைந்ததற்காக ஓர் ஆடவருக்கு 14 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
37 வயது சிங்கப்பூரர் முகமது ஃபிர்தௌஸ் மொக்தார் (Muhammad Firdhaus Mokhtar) தம் மகனைப் பாலர் பள்ளியிலிருந்து அழைத்துச் சென்றபோது சம்பவம் நடந்தது.
மார்ச் 6ஆம் தேதி ஃபிர்தெளஸ் மகனின் பள்ளி நண்பர் அவரை நோக்கி நடுவிரலைக் காட்டினார்.
கோபமடைந்த ஃபிர்தௌஸ் அந்தச் சிறுவனை அருகிலிருந்த பேருந்து நிறுத்தம் வரை பின்தொடர்ந்தார்.
அங்கு சிறுவனின் கையைப் பிடித்து இரு கன்னங்களிலும் பலமாக அறைந்தார். சிறுவன் கீழே விழுந்தார்.
அவனுடைய விரலை உடைத்துவிடுவதாகவும் ஃபிர்தௌஸ் மிரட்டினார்.
சிறுவனின் இரு கன்னங்களிலும் காயங்கள் ஏற்பட்டது. காதில் இலேசான இரைச்சல் கேட்டதாகவும் தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து மருத்துவமனை காவல்துறைக்குப் புகார் அளித்தது.
சிறுவனின் தாயாருக்கு ஃபிர்தௌஸ் 170 வெள்ளி இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஃபிர்தௌஸின் மனைவி கர்ப்பமுற்றிருப்பதால் சிறைத்தண்டனையை நவம்பர் 13ஆம் தேதி வரை ஒத்திவைக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ஆதாரம் : CNA