இரண்டு மனைவிகள், இரண்டு குடும்பங்கள்...30 ஆண்டு ரகசியம் உடைந்தது - ஆடவருக்குச் சிறை
வாசிப்புநேரம் -
இரண்டு திருமணங்கள் புரிந்த சிங்கப்பூரருக்கு ஓராண்டு, ஐந்து மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
67 வயது இங் தியொங் மின் (Ng Teong Min) இரண்டாவது திருமணத்தைச் சிங்கப்பூரிலிருக்கும் முதல் குடும்பத்திடமிருந்து 30 ஆண்டாக மறைத்து வைத்திருந்தார்.
1980இல் அவர் சிங்கப்பூரில் முதல் திருமணத்தைப் புரிந்தார். அவருக்கு இரண்டு பிள்ளைகள் உண்டு.
1985 முதல் 1995 வரை அவர் அடிக்கடி மலேசியாவின் சரவாக் மாநிலத்துக்கு வர்த்தக நோக்கத்துக்காகச் சென்றார்.
1995இல் அவர் சரவாக்கில் ஒரு பெண்ணைக் கரம்பிடித்தார். அங்கும் அவருக்கு இரண்டு பிள்ளைகள்.
முப்பது ஆண்டாக அது ரகசியமாகவே இருந்தது.
இவ்வாண்டு ஆகஸ்ட் மாதத்தில் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையத்துக்கு யாரோ ஒருவர் அது பற்றி மின்னஞ்சல் அனுப்பினார்.
அதன் பிறகுதான் உண்மை தெரிந்தது.
இரண்டு திருமணங்களைச் செய்த குற்றத்தை இங் ஒப்புக்கொண்டார்.
நீதிமன்றத்தில் கண்கலங்கியவாறு இங் குடும்பத்தாரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். தன் பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் முன்னுதாரணமாக இருக்க முயலப் போவதாக அவர் கூறினார்.
முதல் மனைவி அவரை விவாகரத்து செய்வதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஆதாரம் : CNA