Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஓட்டுநர் உரிமமில்லை... அளவுக்கு மீறிய மயக்க மருந்து... காரில் குடும்பம் - காரையோட்டி விபத்துகளில் சிக்கியவருக்குச் சிறை

வாசிப்புநேரம் -

ஓட்டுநர் உரிமமின்றிக் காரை ஓட்டிச் சென்றதற்கும் மயக்கத்தில் காரைச் செலுத்தியதற்கும் ஒருவருக்கு 3 ஆண்டு ஒரு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

கோ ஸெங் ஹுவி (Goh Zheng Hui) என்ற அந்த 31 வயதுச் சிங்கப்பூரர் 5 ஆண்டுக்கு வாகனமோட்டக்கூடாது என்று தடையும் விதிக்கப்பட்டது. 

2021 டிசம்பரில் கோ காரை வாடகைக்கு எடுத்து அதில் அவரது மனைவியையும் 2 பிள்ளைகளையும் வெளியே அழைத்துச் செல்ல விரும்பினார். 

அவர் Telegram மூலம் ஒருவரின் Singpass மின்னிலக்க அடையாளத்தை வாடகையாகப் பெற்றுக்கொண்டார்; அதைக்கொண்டு GetGo தளத்திலிருந்து காரை வாடகைக்கு எடுத்தார்.

என்ன நடந்தது?

  • கோ காரில் குடும்பத்தை அழைத்துக்கொண்டு கேலாங் வட்டாரத்துக்குச் சென்றார்
  • அங்கு அவர் வலி மருந்துகளையும் மயக்கம் தரும் இருமல் மருந்துகளையும் கலந்து உட்கொண்டார்
  • மயக்கத்துடன் காரோட்டிய  அவர் நடைபாதையில் காரைச் செலுத்தி, விளக்குக்கம்பத்தின் மீது மோதினார்
  • விளக்குக்கம்பம் பக்கத்தில் இருந்த உணவகத்தின் பெயர்ப்பலகையில் விழுந்து வளாகத்தில் மின்தடையை ஏற்படுத்தியது
  • சம்பவ இடத்திலிருந்து தப்ப பின்னோக்கிச் சென்ற கோ
  • இன்னொரு கார் மீது மோதினார்
  • அங்கிருந்து வெளியேற மிக வேகமாகச் சென்றபோது ஒரு டாக்சிமீது மோதி அதன் ஓட்டுநருக்குக் காயத்தை ஏற்படுத்தினார்
  • காரில் பாதுகாப்பு இல்லை என்று உணர்ந்த அவரது மனைவி, காரை நிறுத்தச் சொன்னார். பின்னர் குடும்பம் டாக்சி எடுத்து வீடு சென்றது. 

கோ பின்னர் கைது செய்யப்பட்டார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்