Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தெம்பனிஸில் பரபரப்பான சாலையில் காதலியை இழுத்துச்சென்று துன்புறுத்திய ஆடவருக்குச் சிறை

வாசிப்புநேரம் -
காதல் வாழ்க்கை முடிவுக்கு வந்ததால் மனமுடைந்த ஓர் ஆடவர் தமது வாழ்க்கையை முடித்துக்கொள்ளப்போவதாகக் காதலியை மிரட்டியதோடு பரபரப்பான சாலையில் அவரை நிற்கச் சொல்லி வற்புறுத்தியுள்ளார்.

சீனாவைச் சேர்ந்த 44 வயது வாங் ஷிச்சோவ் (Wang Shizhou) என்ற அவர் முன்னாள் காதலியின் பாதுகாப்புக்கு ஆபத்து வரவழைக்கும் அளவுக்கு மோசமாக நடந்துகொண்ட குற்றம் நிரூபிக்கப்பட்டது.

அவருக்கு 18 நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் வேலை செய்துவந்த வாங் தற்கொலை செய்துகொள்ளப்போவதாகக் கூறிக் கடந்த மாதம் (பிப்ரவரி 2025) 10ஆம் தேதி மாலை 4 மணிக்கு முன்னாள் காதலிக்குக் குறுஞ்செய்தி அனுப்பினார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் முதலாளி இது குறித்துக் காவல்துறைக்குப் புகார் தந்தார். காவல்துறை அதிகாரிகள் வாங்கைச் சாங்கிப் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர்..

சிகிச்சை முடிவதற்குள் வாங் மருத்துவமனையிலிருந்து வெளியேறி முன்னாள் காதலியைத் தேடிச் சென்றார்.

இரவு 10.55 மணியளவில் தெம்பனிஸில் முன்னாள் காதலி வேறொருவருடன் பேசிக்கொண்டிருந்ததை அவர் கண்டார்.

அவரைப் பார்த்து சத்தம்போட்ட வாங் அப்பெண்ணை வெற்றுத்தளத்திலிருந்து இழுத்துச்சென்றார்.

சாலையிலிருந்த தடுப்பைத் தாண்டி பரபரப்பான சாலையைக் கடக்குமாறு வாங் அப்பெண்ணைக் கட்டாயப்படுத்தினார்.

இதனால் பெண்ணுக்கு உடலில் வலி ஏற்பட்டது. ஆனால் கடுமையான காயங்கள் ஏற்படவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அன்றே வாங் கைதுசெய்யப்பட்டு மனநலக் கழகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

சம்பவம் நடந்த நாளன்று அளவுக்கு மீறி மது அருந்தியிருந்ததை வாங் ஒப்புக்கொண்டார்.

ஒருவரது வாழ்க்கைக்கு அல்லது சுய பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுத்தும் அளவுக்கு மோசமாக நடந்துகொள்ளும் குற்றத்துக்குக் கூடியபட்சம் ஓராண்டுச் சிறை, அதிகபட்சம் 5,000 வெள்ளி அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்