சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த முதியவருக்கு 20 ஆண்டுச் சிறை
வாசிப்புநேரம் -
சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த முதியவருக்கு 20 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு வயது 69. சிறுமிக்கு ஏறத்தாழ 10 வயது. அவள் அவருக்குப் பேத்தி முறை.
சிறுமியின் தந்தை சிறைக்குச் சென்றதால் அவள் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தாள்.
பாட்டியும் தாத்தாவும் விவாகரத்துச் செய்து சில ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்தனர்.
அவர்கள் மீண்டும் சேர்ந்த வேளையில் சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகினாள்.
2016க்கும் 2017க்கும் இடையே முதியவர் பல முறை சிறுமியிடம் அத்துமீறினார்.
பின்னர் அவர் மீண்டும் தம் மனைவியைப் பிரிந்தார்; வீட்டிலிருந்து வெளியேறினார்.
2020இல் சம்பவம் குறித்துப் புகார் எழுந்தது.
சிறுமி தன்னைத் தானே வருத்திக்கொண்டதும் அவளது கைகளில் வெட்டுக் காயங்கள் இருந்ததும் பள்ளியில் தெரிய வந்தது.
அது குறித்துப் பள்ளியில் விசாரித்தபோது முதியவரின் செயல் அம்பலமானது.
முதியவர் 2 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். மேலும் 12 குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்பட்டன.
அவர் 50 வயதைக் கடந்ததால் பிரம்படி விதிக்கப்படவில்லை.

ஆதாரம் : CNA