Skip to main content
வாடகை கொடுக்காமல் 3 வீடுகளில் வசித்த ஆடவர்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

வாடகை கொடுக்காமல் 3 வீடுகளில் வசித்த ஆடவர் - எப்படி?

வாசிப்புநேரம் -
வாடகை கொடுக்காமல் 3 வீடுகளில் வசித்த ஆடவர் - எப்படி?

Google Maps

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 04 Nov 2026 02:25PM புதுப்பிப்பு : 04 Nov 2026 02:26PM

வாடகை செலுத்தாமல் மூன்று வீடுகளில் வசித்த ஆடவர் ஒருவரை மோசடிச் சந்தேகத்தில் காவல்துறை விசாரித்து வருகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த அந்தோணி தாமஸ் பிரைஸ் (Anthony Thomas Price) என்பவர் போலி நிறுவனங்களின் பெயரைப் பயன்படுத்தி தரை வீடுகளை வாடகைக்கு எடுத்ததாக நீதிமன்றம் கண்டறிந்தது.

2019 முதல் 2024 வரை மேலும் இரண்டு வீடுகளை அவர் அவ்வாறு வாடகைக்கு எடுத்ததாகவும் நீதிமன்றம் கூறியது.

கெம்பாங்கானில் (Kembangan) உள்ள தரை வீட்டை உரிமையாளர்களிடம் திருப்பி ஒப்படைக்க பிரைஸ் பயன்படுத்திய நிறுவனத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

வாடகை உள்ளிட்ட மற்ற கட்டணத்தைச் செலுத்தவும் உத்தரவிடப்பட்டது.

பிரைஸின் சட்ட மீறல்கள் குறித்துக் கணக்கியல், நிறுவனக் கட்டுப்பாட்டு ஆணையம் (Accounting and Corporate Regulatory Authority) விசாரித்து வருகிறது.

சட்ட, போக்குவரத்து மூத்த துணையமைச்சர் முரளி பிள்ளை நாடாளுமன்றத்தில் அதனைத் தெரிவித்தார்.

மோசடிக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 10 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

அபராதம் அல்லது பிரம்படி அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்