Skip to main content
ஓய்வுபெற வற்புறுத்திய நிறுவனம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

ஓய்வுபெற வற்புறுத்திய நிறுவனம் - $26,000 இழப்பீடு பெற்ற ஊழியர்

வாசிப்புநேரம் -
ஓய்வுபெற வற்புறுத்திய நிறுவனம் - $26,000 இழப்பீடு பெற்ற ஊழியர்

(கோப்புப் படம்: Calvin Oh)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஓய்வுபெற வற்புறுத்திய நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடுத்த ஆடவருக்குச் சுமார் 26,000 வெள்ளி இழப்பீடு கிடைத்துள்ளது.

கடந்த ஆண்டு அவர் 63 வயதை எட்டிய மூன்று மாதத்தில் நிறுவனம் அவரை வேலையிலிருந்து நீக்கியதாகக் கூறப்பட்டது.

சட்டப்படி ஓய்வுபெறும் வயதை அப்போது அவர் எட்டியதால் அவரைப் பணியிலிருந்து நீக்கியதாக நிறுவனம் கூறியது.

அதற்காக முன்னறிவிப்பு அல்லது இழப்பீட்டுத் தொகை தரவேண்டிய அவசியம் இல்லை என்றும் அது சொன்னது.

வேலையைத் தொடர்வதற்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை அவர் நிராகரித்தார் என்றும் நிறுவனம் குறிப்பிட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி, வேலை நியமன ஒப்பந்தத்தின்படி நிறுவனம் என்ன செய்திருக்கவேண்டும் என்பதை எடுத்துரைத்தார்.

ஊழியரைப் பணிநீக்கம் செய்ய விரும்பினால் நிறுவனம் முன்னறிவிப்பு கொடுக்கவேண்டும் அல்லது இழப்பீட்டுத்தொகை வழங்கவேண்டும் என்று நீதிபதி வலியுறுத்தினார்.

பணியில் தொடர்வது குறித்து நிறுவனம் முறையாகக் கலந்துரையாடவில்லை என்றும், குறைந்தபட்ச ஓராண்டு கால ஒப்பந்தத்தை வழங்கவில்லை என்றும் அவர் சொன்னார்.

எனவே நிறுவனம் இழப்பீட்டுத் தொகை வழங்கவேண்டும் என்று தீர்ப்பளிப்பதாக நீதிபதி கூறினார்.
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்