தெரியாத பெண்ணைக் கொல்ல முயன்ற ஆடவருக்கு ஐந்தரை ஆண்டுச் சிறை
CNA/Wallace Woon
This audio is generated by an AI tool.
Kallang Wave கடைத்தொகுதியில் முன் பின் தெரியாத பெண்ணைக் கொல்ல முயன்ற 27 வயது ஆடவருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சுவா ஜிங் யுவெனுக்கு (Chua Jing Yuan) ஐந்தரை ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
சம்பவம் கடந்த ஆண்டு ஜூலை 13ஆம் தேதி நடந்தது.
சுவா கடைத்தொகுதியில் இருந்த 31 வயதுப் பெண்ணைக் கத்தியால் குத்தினார்.
பெண்ணுடன் கூட இருந்த சிலர் சுவாவைத் துரத்திப் பிடித்தனர்.
அவர்கள் காவல்துறையிடம் தகவல் கொடுத்தனர்.
சுவா தம்மைத் துப்பாக்கியால் சுடும்படி அதிகாரிகளைக் கோரினார்.
அதிகாரிகள் தம்மைச் சுடுவதற்காகவே பெண்ணைக் கொலை செய்ததாகவும் அவர் கூறினார்.
பெண் மார்பிலும் கழுத்திலும் காயங்களுடன் உயிர் தப்பினார்.
அவர் மறுநாள் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.
சுவாவிற்கு மனநலப் பிரச்சினைகள் இருப்பதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
மனநலம் குன்றிய அவர் ஒரு குரலைக் கேட்டதாகவும் அது சொன்னதைக் கேட்டுச் செயல்பட்டதாகவும் கூறப்பட்டது.
சுவா அதற்காகக் கத்தி, சுத்தியல் உள்ளிட்ட பொருள்களையும் வாங்கியிருந்தார்.
அவருக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது பிரம்படி அல்லது ஒன்றுக்கும் மேலான தண்டனைகள் விதிக்கப்பட்டிருக்கலாம்.