19 வயது நபரைக் கடத்த முயன்றதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு
வாசிப்புநேரம் -
படம்: SPF
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
19 வயது ஆடவரைக் கடத்த முயன்றதாக 38 வயது ஆடவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
சிங்கப்பூரரான 38 வயது மாஷஹ்ரி மஸ்லான் (Mashahri Mazlan) மீது கடத்த முயன்றதாகவும் ஆயுதம் வைத்திருந்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அவர் 19 வயது ஆடவரைப் பாராங் எனும் கத்தியால் மிரட்டியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவம் குறித்து நேற்று (4 ஆகஸ்ட்) பின்னிரவு சுமார் 1.55 மணிக்குத் தகவல் பெற்றதாகக் காவல்துறை தெரிவித்தது.
கான்பரா ஸ்ட்ரீட்டில் உள்ள ஒரு கார் நிறுத்தும் இடத்தில் ஓர் ஆடவரை ஒரு கும்பல் மிரட்டுவதாகத் தகவல் கிடைத்ததாக அது சொன்னது.
கார் வாடகை ஒப்பந்தம் தொடர்பில் இரு ஆண்களும் இரு பெண்களும் அந்த ஆடவரை எதிர்கொண்டதாக விசாரணையில் தெரிந்தது.
மாஷஹ்ரி பாராங் கத்தியைக் கொண்டு ஆடவரை மிரட்டியதாகவும் வாகனத்தின் முன்புற இருக்கையில் அவரை அமரச் சொன்னதாகவும் நம்பப்படுகிறது.
பின்னர் அவர் காரை சில பகுதிகளுக்கு ஓட்டிச் சென்றார்.
காவல்துறை காரைக் கண்டுபிடித்ததும் மாஷஹ்ரி 19 வயது ஆடவருடன் காரில் தப்ப முயன்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
காரில் 36 வயது நபரும் இருந்தார்.
மாஷஹ்ரி காரை உட்லண்ட்ஸில் விளக்குக் கம்பம் மீது மோதிய பின்னர் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
30, 38 வயதுடைய இரு பெண்களும் 36 வயது ஆடவரும் பின்னர் கைது செய்யப்பட்டனர்.
கடத்திய குற்றம் நிரூபிக்கப்பட்டால் மாஷஹ்ரிக்கு 7 ஆண்டுவரை சிறைத்தண்டனை, அபராதம், பிரம்படி அல்லது அவற்றில் சில தண்டனைகள் விதிக்கப்படலாம்.

தொடர்புடையது:
ஆதாரம் : CNA