7 ஆண்டுகளாகத் தங்கைக்குப் பாலியல் தொந்தரவு - அண்ணனுக்கு 18 ஆண்டுச் சிறை, 24 பிரம்படி
கோப்புப்படம்: Reuters/Edgar Su
தங்கையை ஏழு ஆண்டுகளாகப் பாலியல் தொந்தரவு செய்துவந்த அண்ணனுக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 24 பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன.
அப்போது அண்ணனுக்கு 12 வயது; தங்கைக்கு 5 வயது.
இப்போது அண்ணனுக்கு 26 வயதாகிறது.
ஆடவர் இரண்டு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.
மேலும் 8 குற்றச்சாட்டுகள் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
பாதிக்கப்பட்ட தங்கையின் அடையாளத்தைப் பாதுகாக்க குற்றம் செய்த அண்ணனின் பெயரை வெளியிட நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது.
அந்த அண்ணனும் தங்கையும் தங்களது அப்பா, அம்மா, இன்னும் இரண்டு மூத்த சகோதரர்களுடன் ஒரே வீட்டில் வசித்தவர்கள்.
அண்ணன் கடந்த 2012ஆம் ஆண்டில் தமது தங்கையைப் பாலியல் தொந்தரவு செய்ய ஆரம்பித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
மறுத்தால் தங்கையைக் குத்தி, கன்னத்தில் அறைந்து, கிள்ளி அண்ணன் கொடுமைப்படுத்தியதாகவும் கூறப்பட்டது.
நடந்ததைப் பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டியதும் தெரியவந்தது.
தங்கைக்கு 7 அல்லது 8 வயதானபோது அண்ணன் சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்யத் தொடங்கியதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
நடந்ததைப் பற்றி அந்தப் பெண் 2022ஆம் ஆண்டு பள்ளி ஆலோசகரிடம் தெரிவித்தார். அதன்வழி காவல்துறைக்குப் புகார் அளிக்கப்பட்டது.
புகார் தந்த இரண்டு நாள்களுக்குப் பிறகு ஆடவர் கைது செய்யப்பட்டார்.