Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மூளைக் கட்டிப் பிரச்சினையால் மனைவியைப் பிரிய நேரிட்ட கணவர்... குணமடைந்ததும் மீண்டும் மணந்தார்...

வாசிப்புநேரம் -

Glioblastoma என்னும் அரிய வகை மூளைக் கட்டியால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவர் அதைக் கண்டுபிடித்து, குணப்படுத்திக்கொள்ள சிகிச்சை மேற்கொண்டு, பிரிந்த குடும்பத்துடன் மீண்டும் சேர்ந்திருக்கிறார். 

அவரைக் காப்பாற்றியுள்ளது தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனை.

கோவிட்-19 காலக்கட்டத்தில் மனைவி, குழந்தைகள் ஆகியோரிடம் கடுமையாக நடந்துகொண்டார் திரு மைதீன் சடையன். 

அதனால் அவரது 15 ஆண்டு காலத் திருமணம் முறிந்தது. 


கடந்த ஆண்டு திரு. மைதீனுக்குப் பலமுறை வலிப்பு ஏற்பட்டதால் அவர் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்குச் சென்றார்.

எல்லாப் பரிசோதனைகளையும் முடித்த மருத்துவர்கள் கடைசியாக அவருக்கு இருக்கும் மூளைக் கட்டியைக் கண்டுபிடித்தனர். 

திரு மைதீனுக்கு தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனையின் மருத்துவக் குழு எல்லாவிதத்திலும் உதவியது.

அறுவைச் சிகிச்சை முடிந்தபின் திரு மைதீனின் குறுகியகால நினைவுகள் சற்றுப் பாதிப்படைந்தன.

இருப்பினும் அவரின் உடல்நிலை நன்றாக முன்னேற்றம் கண்டுவருகிறது.

பிரிந்த மனைவியைக் கடந்த மாதம் மீண்டும் திருமணம் செய்துகொண்டு, குடும்பத்துடன் இணைந்தார் திரு. மைதீன். 

முழுநேர வேலைக்கும் அவர் திரும்பியிருக்கிறார். 

கிடைத்துள்ள இரண்டாம் வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்று நம்பிக்கையுடன் வாழ்க்கையில் முன்னேறும் திரு. மைதீனின் கதையை இன்றிரவு 8:30 மணிச் செய்தியில் காணலாம். 
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்