Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கூடுதல் மானியம் பெற ஊழியர் சம்பளத்தை மிகைப்படுத்திய நிறுவன இயக்குநருக்குச் சிறை

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் PCP எனப்படும் நிபுணத்துவத் திறன் மாற்றுப் பயிற்சித் திட்டத்தின்கீழ் கூடுதல் மானியம் பெற தமது ஊழியர்களின் சம்பளத்தை மிகைப்படுத்திக் காட்டிய நிறுவன இயக்குநருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

33 வயது மலேசியரான லிம் டெ சியன் (Lim De Xian) சென்ற மாதம் குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவருக்கு 12 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

7W Consultancyஇன் இயக்குநரான அவர், அதன் பங்குதாரர்களில் ஒருவர்.

நிறுவனத்தின் இன்னொரு பங்குதாரர் அதன் பொது மேலாளரான ஸு ஷாவன் (Xu Shaowen).

ஸுவுடன் திட்டமிட்டு 2017 டிசம்பரில் லிம் தேசிய முதலாளிகள் சம்மேளனத்துக்குப் பொய்த் தகவல்களுடன் PCP திட்டத்தில் சேர்வதற்கான விண்ணப்பத்தை அனுப்பினார்.

ஸுவுக்குச் சென்ற நவம்பரில் 13 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அவர்கள் விண்ணப்பம் செய்த திட்டத்தில் பங்கெடுக்கும் நிறுவனங்கள் சம்பள ஆதரவு, பயிற்சிகளுக்கான நிதி போன்றவற்றைப் பெறுவர். தொகை ஊழியர்களின் மாதச் சம்பளத்தைப் பொறுத்தது.

அந்நேரத்தில் ஸுவின் சம்பளம் 1,250 வெள்ளி. ஆனால் PCP விண்ணப்பத்தில் அவரின் சம்பளம் 5,800 வெள்ளி என்று குறிப்பிடப்பட்டது.

அதன் மூலம் நிறுவனத்துக்கு அதிகபட்ச மானியமான 4,000 வெள்ளி கிடைக்கும் என்பதை ஸு அறிந்திருந்தார்.

மே 2018இல் தேசிய முதலாளிகள் சம்மேளனம் லிம்மின் நிறுவனத்துக்கு மொத்தம் 12,000 வெள்ளி வழங்கியது. அத்துடன், பயிற்சி வகுப்பொன்றுக்கு 1,995 வெள்ளியும் வழங்கப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்