Skip to main content
வேலையை நிராகரித்த பெண்ணுக்குப் பாலியல் துன்புறுத்தல்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

வேலையை நிராகரித்த பெண்ணுக்குப் பாலியல் துன்புறுத்தல் - ஆடவருக்குச் சிறை

வாசிப்புநேரம் -
வேலையை நிராகரித்த பெண்ணுக்குப் பாலியல் துன்புறுத்தல் - ஆடவருக்குச் சிறை

படம்: கோப்புப் படம்/State Courts in Singapore

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

தமது முதலாளி வழங்கிய வேலை வாய்ப்பை நிராகரித்த பெண்ணைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய ஆடவருக்கு 7 ஆண்டுச் சிறைத்தண்டனையும் 4 பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூரர் 34 வயது சோய் சிஷெங் (Choy Zisheng) பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய ஒரு குற்றச்சாட்டையும் நீதிக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டையும் ஒப்புக்கொண்டார்.

மேலும் 3 குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்பட்டன.

2023ஆம் ஆண்டு சம்பவம் நடந்தது.

அந்த 21 வயதுப் பெண் சோய் பணியாற்றிய நிறுவனத்தில் ஒரு வேலை வாய்ப்பை நிராகரித்தார்.

2024ஆம் ஆண்டு சோய் அவரைத் தொடர்பு கொண்டார்.

இருவரும் இரவு உணவருந்தினர்.

அப்போது அந்தப் பெண் கழிப்பறைக்குச் சென்றார்.

பின்தொடர்ந்து சென்ற சோய் கழிப்பறையில் அந்தப் பெண்ணைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தினார்.

வெளியே யாரோ வரும் சத்தம் கேட்டதும் அங்கிருந்து சோய் தப்பினார்.

மறுநாள் அந்தப் பெண் காவல்துறையிடம் புகார் அளித்தார்.

சோய் கைது செய்யப்பட்டார்.

பாலியல் துன்புறுத்தல் குற்றத்திற்கு அவருக்கு 20 ஆண்டு வரை சிறைத் தண்டனையும் அபராதமும் அல்லது பிரம்படியும் விதிக்கப்பட்டிருக்கலாம்.

நீதிக்கு இடையூறு விளைவித்த குற்றத்திற்கு அவருக்கு 7 ஆண்டு வரை சிறை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்பட்டிருக்கலாம்.

ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்