Skip to main content
உணவங்காடியில் முதியவரைத் தள்ளிய ஆடவர்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர் trending

உணவங்காடியில் முதியவரைத் தள்ளிய ஆடவர் - சர்ச்சை

வாசிப்புநேரம் -
உணவங்காடியில் முதியவரைத் தள்ளிய ஆடவர் - சர்ச்சை

Facebook/Bei-Ing Wanton Noodle

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 16 Aug 2026 05:57PM புதுப்பிப்பு : 17 Aug 2026 10:47AM

உணவங்காடியில் முதியவருடன் சண்டையிட்டு அவரைக் கீழே தள்ளிய ஆடவரை முதியவரின் குடும்பத்தினர் தேடிவருகின்றனர்.

ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டிலுள்ள ரோக்ஸி ஸ்குவேர் (Roxy Square) கடைத்தொகுதியில் நேற்று மாலை (ஆகஸ்ட் 15)சம்பவம் நடந்தது.

அங்கிருக்கும் பெய் இங் நூடுல்ஸ் (Bei-Ing Wanton Noodle) கடையை முதியவரின் குடும்பம் நடத்துகிறது.

கடையில் ஆடவர் தம் குடும்பத்தினருடன் உணவருந்திக் கொண்டிருந்தபோது 70 வயது மதிக்கத்தக்க முதியவர் அந்தப் பக்கம் சென்றார்.

அவர் சிரமப்பட்டுப் பக்கத்திலிருந்த மேசைகளையும் நாற்காலிகளையும் பிடித்துக்கொண்டு நடந்தார்.

அப்போது அந்த முதியவர் ஆடவரின் மகளின் தலையைப் பிடித்தார்.

அதைக் கண்ட அந்த ஆடவர் முதியவருடன் சண்டையிடத் தொடங்கினார்.

கோபத்தில் அவரைக் கீழே தள்ளிவிட்டார்.

அங்கிருந்த கண்காணிப்புக் கேமராவில் சம்பவம் பதிவானது. அந்தக் காணொளியை முதியவரின் குடும்பத்தினர் Instagram தளத்தில் பதிவிட்டனர்.

அந்த ஆடவர் பின்னர் மன்னிப்புக் கேட்டு முதியவருக்குப் பானம் வாங்கிக் கொடுத்ததாகக் குடும்பத்தினர் குறிப்பிட்டனர்.

இருப்பினும் சம்பவத்தால் முதியவருக்குக் கடுமையான முதுகு வலி ஏற்பட்டிருப்பதாகவும் மன்னிப்புக் கோரினால் போதாது என்றும் குடும்பத்தினர் பதிவிட்டனர்.

காணொளியை ஆயிரக்கணக்கானோர் பார்த்துவிட்டனர். 7,000த்துக்கும் அதிகமானோர் பதிவில் கருத்துகளைத் தெரிவித்தனர்.

முதியவரைத் தள்ளியிருக்கக்கூடாது என்று பலர் பதிவிட்டனர்.

மகளைப் பாதுகாக்க தந்தை நடவடிக்கை எடுத்தாகச் சிலர் ஆடவரைத் தற்காத்துப் பேசினர்.

ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்