Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

செலவுச் சண்டை - வீட்டில் வசித்தவரைக் குத்திக் கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

வாசிப்புநேரம் -
செலவுச் சண்டை - வீட்டில் வசித்தவரைக் குத்திக் கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

(கோப்புப் படம்: Jeremy Long)

வீட்டில் வசித்தவரைக் கத்தியால் குத்திக் கொன்ற 51 வயது ஆடவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மியன்மாரைச் சேர்ந்த நைங் லின் (Naing Lin) கொலை செய்த ஒரு குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.

2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவருடன் ஒரே வீட்டில் வசித்துவந்த 49 வயது மியோ கியாவ் தூவை (Myo Kyaw Thu) நெஞ்சுப் பகுதியிலும் வயிற்றுப் பகுதியிலும் சில முறை குத்திவிட்டு வீட்டிலிருந்து நைங் லின் வெளியேறினார்.

அப்போது அவர் மது போதையில் இருந்ததாகக் கூறப்பட்டது.

மறுநாள் காலை அவர் வீடு திரும்பியபோது மியோ கியாவ் தூ அவர் அறையில் அசைவின்றி ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

அவர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக அறிவிக்கப்பட்டது.

நைங் லின் காவல்துறையிடம் சரணடைந்தார்.

சம்பவத்திற்கு முன்பு இருவரும் பணம் குறித்த வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

நைங் லின் உட்பட சில நண்பர்களிடமிருந்து மாண்ட நபர் கடன் வாங்கியிருந்ததாக அரசுத்தரப்பு வழக்கறிஞர் கூறினார்.

கொலைக் குற்றத்துக்காக, நைங் லின்னுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கக்கூடும்.

ஆதாரம் : CNA/wt(gs)

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa