Skip to main content
கடத்தல் நாடகம்?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

கடத்தல் நாடகம்? - பங்களாதேஷ் ஆடவர் மீது குற்றச்சாட்டு

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூரில் தாம் கடத்தப்பட்டதாக நாடகம் போட்டு ஏமாற்ற முயன்றதாக  22 வயது ஆடவர் மீது குற்றஞ்சாட்டப்படவுள்ளது.

அவர் பங்களாதேஷைச் சேர்ந்தவர்.

ஆடவர் ஒருவர் வேலைக்கு வரவில்லை என்று நேற்று முன்தினம் (பிப்ரவரி 12) காலை 11.42 மணியளவில் காவல்துறைக்குப் புகார் கிடைத்தது.

அதை விசாரிக்கும்போது அந்த ஆடவர் கடத்தப்பட்டதாய் நேற்றுக் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

கடத்தப்பட்டதாகக் கூறப்படும் ஆடவரின் உறவினருக்கு அவரை விடுவிக்க 3,000 வெள்ளி பணம் கொடுக்கும்படி குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டன.

மேலும் சந்தேக நபர் கட்டிவைக்கப்பட்டதைப்போல் இருக்கும் படங்களும் உறவினருக்குப் பகிரப்பட்டன.

கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட நபரைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடினர்.

ஆனால் அந்த ஆடவர் பாதுகாப்பாக மரினா பே வட்டாரத்தில் கண்டுபிடிக்கப்பட்டார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் தாம் கடத்தப்பட்டதாக நாடகம் போட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆதாரம் : AGENCIES

மேலும் செய்திகள் கட்டுரைகள்